×

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

திருச்சி: தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவில் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் கீதா ஜீவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டி: தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்களில் மேல்முறையீடு தொடங்கிய முதல் 2 நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சர்வர் கோளாறு உள்ளிட்டவை சரி செய்யப்பட்டு பணிகள் தொய்வின்றி நடக்கிறது.

ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை. ஆதார் எண், வங்கி கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. அதிக வருமானம் பெறுபவர்களுக்கு 1000 ரூபாய் பெரிதாக இருக்காது. அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

The post தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Keita Jeevan ,Trichy ,Dintugul ,Karur ,Pudukkotta ,Ariyalur ,Perambalur ,Tamil Nadu Government Social Welfare and Women's Rights Department ,Minister ,Keita Jeevan ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...