×

விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பினார். சென்னை வட பழனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மணிக்கணக்கில் நின்று கொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்துள்ளார். இதனால் மிகவும் சோர்வடைந்து, முதுகு வலி காரணமாக அவதிப்பட்டார். காய்ச்சலும் வந்துள்ளது.

இதையடுத்து வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில், வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, திருமாவளவனை 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வந்தனர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் நலம் விசாரித்தார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறும் திருமாவளவனிடம் தொலைபேசியில் பேசினார்.

The post விசிக தலைவர் திருமாவளவனின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Tags : thirumavavan ,edapadi paranisamy ,Chennai ,Edapadi Palanisamy ,Thirumavalavan ,Cuddalore district ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...