×

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: உரிய இழப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழந்ததை அடுத்து உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி அப்பகுதிமக்கள் நள்ளிரவு வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பந்தலூரை அடுத்துள்ள கோரஞ் சால் பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி இளைஞர் குமார் நேற்று வங்கியில் பணமெடுக்க சென்றபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார்.

அவரது குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரி அப்பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும். கும்கி யானைகளை வரவழைத்து யானைகளை அடர்வனத்திற்கு விரட்ட வேண்டும் என்றும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து நள்ளிரவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: உரிய இழப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Bandalur Nilagiri ,Nilgiris ,Bandalur ,Dinakaran ,
× RELATED ஆற்றில் மூழ்கி காவலர் பலி