×

வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி மூகாம் இன்று துவக்கம்

 

கோவை, செப். 27: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆடுகள் வளர்ப்பில் ஆட்டுக்கொல்லி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக இந்நோய் தாக்கி ஆடுகள் இறப்பதினால் கால்நடை வளர்ப்பு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்த நோயால் ஆடுகள் இறப்பதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்கொல்லி நோய் தடுப்பூசி கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக அனைத்து வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு போடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடத்திற்கான ஆட்கொல்லி நோய் தடுப்பூசி இன்று (27ம் தேதி) முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் ஆட்கொல்லி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தேவையான தடுப்புச் மருந்துகள் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் முகாம்களை பயன்படுத்தி ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி மூகாம் இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,District ,Collector ,Krantikumar Badi ,
× RELATED முன்னாள் படைவீரர் ‘சார்ந்தோர்...