×

ஊட்டியில் பார்க்கிங் தளங்களில் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

 

ஊட்டி, செப்.27: ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், இரண்டாம் சிசன் துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளது. ஊட்டி நகரில் போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், தற்போது கேசினோ சந்திப்பு, பிரீக்ஸ் பார்க்கிங், என்சிஎம்எஸ் மற்றும் அசெம்பளி போன்ற பகுதிகளில் பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பார்க்கில் தளங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக, கழிப்பட வசதி மற்றும் தண்ணீர் வசதி ஆகியவைகளை செய்து தரவில்லை. அவசர தேவைகளுக்கு சுற்றுலா பயணிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, இந்த பார்க்கிங் தளங்களில் நகராட்சி நிர்வாகம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கழிப்பிட வசதி மற்றும் தண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைக்கு பார்க்கிங் தளங்களிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் தற்காலிக கழிப்பிட வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டியில் பார்க்கிங் தளங்களில் அடிப்படை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Oodi ,Sisan ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்