×

கொடுமுடி விற்பனைக்கூடத்தில் ரூ.38.49 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்

 

கொடுமுடி, செப். 27: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ரூ.38.49 லட்சத்துக்கு ஏலம் போனது. கொடுமுடி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 225க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், தேங்காய் காய்கள் 14,600 வரத்தாகின. இதன் மதிப்பு ரூ.1,18,026. இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.16.39க்கும், அதிகபட்சமாக ரூ.23.70க்கும், சராசரி விலையாக ரூ.22.59க்கும் ஏலம் போனது.

கொப்பரை தேங்காய் மூட்டைகள் 1,079 வரத்தாகின. இதன் மதிப்பு ரூ.37,31,011. கிலோ ஒன்றுக்கு முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.72.71க்கும், அதிகபட்சமாக ரூ.80.19க்கும், சராசரி விலையாக ரூ.77.19க்கும் ஏலம் போனது. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.60.99க்கும், அதிகபட்சமாக ரூ.74.99க்கும், சராசரி விலையாக ரூ.70.19க்கும் ஏலம் போனது.  விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா முன்னிலையில் மொத்தம் 38 லட்சத்து 49 ஆயிரத்து 37க்கு விற்பனை நடைபெற்றது.

The post கொடுமுடி விற்பனைக்கூடத்தில் ரூ.38.49 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Coconut ,Kodumudi market ,Kodumudi ,copra ,Dinakaran ,
× RELATED உச்சிப்புளி அரசு பண்ணையில் இரண்டு ரகத்தில் தென்னங்கன்று விற்பனை