×

பா.ஜவில் குழப்பம்

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரசும், மபியில் பா.ஜவும், தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி சார்பில் சோரம்தங்காவும் முதல்வராக இருக்கிறார்கள். இமாச்சல், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்த பிறகு நடக்கும் முதல் மிகப்பெரிய தேர்தல் என்பதால் பா.ஜவில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

2018ல் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியைப்பிடித்தது. முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார். ஆனால் 15 மாதங்களில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 பேர் எம்எல்ஏ
பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் பா.ஜ ஆட்சிக்கு வந்தது. மீண்டும் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார். மீண்டும் அதே பா.ஜ ஆட்சி. அங்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பா.ஜவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் பா.ஜ வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே வேட்பாளர் பட்டியல் அங்கு வெளியிடப்பட்டது. தற்போது வரை 3 கட்டமாக 79 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் தோமர், பகன்சிங், பிரகலாத்சிங் பட்டேல் உள்பட 7 எம்பிக்களுக்கு அங்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 79 வேட்பாளர்களாக அறிவித்தும் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பெயர் இன்னும் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற பேச்சு பலமாக அடிபட்டு வருகிறது. அதனால் தான் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அங்கு களமிறக்கப்படுகிறார் என்கிறார்கள். ஜோதிராதித்யாவை நம்பி பா.ஜவுக்கு சென்ற பலர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிவிட்டார்கள். அங்கு காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. எனவேதான் தோல்வியை தவிர்க்க, அல்லது தோற்கும் அளவை குறைக்க பலம் வாய்ந்த வேட்பாளர்களை பா.ஜ தேர்வு செய்து நிறுத்தி வருகிறது.

இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் பா.ஜ தலைவர்களுக்கு இடையே ஒற்றுமையில்லை. அங்கு முன்னாள் முதல்வர் வசுந்துரா ராஜேவை யாரும் அழைப்பதில்லை. ராஜஸ்தான் காங்கிரசில் நிலவி வந்த குழப்பம் டெல்லி மேலிடத்தால் தீர்த்து வைக்கப்பட்டுவிட்டதால் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் பொதுவெளியில் கட்சிப்பிரச்னை பற்றி பேசுவது இல்லை. இதனால் காங்கிரஸ் அங்கு பலமாக உள்ளது. பா.ஜ பலவீனமாக உள்ளது. இன்ெனாரு பக்கம் சட்டீஸ்கர். அங்கும் காங்கிரசுக்கு சாதகமான சூழல் நிலவி வருவதால் என்ன செய்வது என்றே தெரியாமல் பா.ஜ திணறிவருகிறது. தெலங்கானாவில் ேதர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 115 தொகுதி வேட்பாளர்களை சந்திரசேகரராவ் அறிவித்து விட்டார். ஆனாலும் இந்தமுறை காங்கிரசுக்கு சாதகமான அலை வீசுகிறது. பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் அணி மாறி காங்கிரசில் இணைய உள்ளார்.

இதை விட முக்கியமாக ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் தங்கையுமான சர்மிளா தெலங்கானா காங்கிரசில் தனது கட்சியை இணைக்க உள்ளதாகவும், அதை தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சர்மிளா களமிறக்கப்படலாம் என்ற யூகங்கள் நிலவி வருகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் பலம் பெற்று வருவதால் பா.ஜ குழப்பம் அடைந்து இருக்கிறது.

The post பா.ஜவில் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : Pa ,Javille ,Madhya Pradesh ,Chattiskar ,Rajasthan ,Telangana ,Mizoram ,Chitteiskar ,Pa. Javille ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்