
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம், ஹார்னெட் பைக் மற்றும் டியோ ஸ்கூட்டர்களின் ரெப்சால் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், ஹார்னெட் ரெப்சல் எடிஷன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.4 லட்சம் எனவும், டியோ சுமார் ரூ.92,300 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே சந்தையில் உள்ள ஸ்டாண்டர்டு மாடலை விட இவை சுமார் ரூ.1,000 அதிகமாகும். இவற்றில் ரோஸ் ஒயிட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்ச் பெயிண்ட்டுடன் கவர்ந்திழுக்கும் வகையில் ரெப்சால் கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ளது.
டியோ 125ல் 123.92 சிசி 4 ஸ்டிரோக், சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்6 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், எல்இடி ஹெட்லாம்ப்கள், வேவ் டிஸ்க் பிரேக்குகள், ஆரஞ்சு அலாய் வீல்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் , ஸ்மார்ட் கீ இடம் பெற்றுள்ளன.
ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷனில் 184.4 சிசி, 4 ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்6 இன்ஜின் இடம் பெற்றுள்ளது.இது அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 15.9 டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதுதவிர சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச், தலைகீழ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், டிஸ்க் பிரேக், சிங்கிள் சானல் ஏபிஎஸ் ஆகியவை உள்ளன. மேற்கண்ட 2 வாகனங்களுக்கும் 10 ஆண்டு வாரண்டியை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது.
The post ஹோண்டா ரெப்சால் எடிஷன் appeared first on Dinakaran.