×

பா.ஜ பெண் எம்பி என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்: விசாரணை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு செப்டம்பரில் மசூதி ஒன்றின் அருகில் குண்டு வெடித்து 6 பேர் பலியானார்கள். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு மசூதி அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாரதிய ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்தியாய் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பு என்ஐஏ கோர்ட் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது மற்ற 5 கைதிகள் கோர்ட்டில் ஆஜரான பின்னர் 2 மணி நேரம் காலதாமதமாகத்தான் பிரக்யா சிங் தாக்கூர் கோர்ட்டில் ஆஜரானார்.

உடல் நலம் பாதித்திருப்பதாகவும் அதனால் காலையில் எழுந்திருக்க தாமதம் ஆகிவிட்டதாகவும் அதனால்தான் கோர்ட்டுக்கு வர காலதாமதம் ஆகிவிட்டது என்றும் பிரக்யா சிங் தாக்கூர் கோர்ட்டில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் 3ம் தேதி பதிவு செய்யப்படும் என்று கூறிய நீதிபதி, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post பா.ஜ பெண் எம்பி என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்: விசாரணை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Pa. Ajar ,Ja Woman ,NIA ,Mumbai ,Maharashtra ,Malega ,
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...