×

கன்னட அமைப்புகள் பந்த் எதிரொலி!: சென்னை – பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: கன்னட அமைப்புகள் பந்த் எதிரொலியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை பந்த் நடைபெறுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் பேரில், தமிழகத்துக்கு கூடுதலாக 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீரை தொடர்ந்து திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டத்தில் செப்டம்பர் 26ம் தேதி தமிழகத்துடனான நதிநீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கர்நாடக அமைச்சரவை தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து நாளை பெங்களூருவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதே நாளில் கர்நாடகா பந்த் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி வட்டம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியும் பந்த்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் கன்னட அமைப்புகள் நாளை முழு அடைப்பு நடத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கு ஏற்ப சென்னை, பெங்களுருவில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கன்னட அமைப்புகள் பந்த் எதிரொலி!: சென்னை – பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kannadha Systems Bant ,Chennai ,Bangalore ,Kannadha Systems Pant ,Bengaluru ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்