×

தேனி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி : மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி தேனி மாவட்டத்தில் வருகிற 28ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 02ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேன் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வருகிற 28-ந்தேதி மிலாடி நபி தினம் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் ஆகியவை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வருகிற 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற பார்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும். அன்றைய நாட்களில் மது விற்பனை எதுவும் மேற்கொள்ள கூடாது. விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac Shops ,Honey District ,Theni ,Miladi Prophet ,Gandhi Jayanthi ,Theni district ,Tasmac ,
× RELATED கடமலைக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால்...