×

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பு எடுத்தாலும் மருத்துவம் முதுநிலை படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு பாஜகவின் செல்வாக்கு: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பு எடுத்தாலும் மருத்துவம் முதுநிலை படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு பாஜகவின் செல்வாக்கு படைத்தவர்களின் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டதா என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக இருந்தாலும் படிப்பில் சேரமுடியும் என்று அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் முதுநிலை மருத்துவ கல்வியில் தரத்தை பராமரிக்க வேண்டுமெனில் நீட் கட்ஆஃப் மதிப்பெண்களை குறைக்கக்கூடாது என்று இதே ஒன்றிய அரசு தான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வாதிட்டது என எக்ஸ் வலைத்தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கான ஆங்கில செய்தி பிரசுரத்தையும் இணைத்துள்ள அவர் தகுதி தகுதி என்று கூறி இந்த அரசுக்கு ஆதரவாக தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முதுநிலை மருத்துவபடிப்புகான குறைந்தபட்ச தகுதியைக்கூட நீக்கி இருப்பது யாருக்கு நன்மை பயபடாத அமையும் என்று ஜெய் ராம் ரமேஷ் வினவியுள்ளார். பூஜ்யம் மதிப்பெண் அறிவிப்பு அதிக தொகையை வாங்கிக்கொண்டு மருத்துவ இடங்களை நிரப்ப காத்திருக்கும் தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே உதவும் என்று அவர் சாடியுள்ளார். பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களின் தகுதிபெறாத குழந்தைகள் பயனடைய ஒன்றிய அரசு யூ டர்ன் அடித்துள்ளதா என்றும் ஜெயராம் ரமேஷ் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பு எடுத்தாலும் மருத்துவம் முதுநிலை படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு பாஜகவின் செல்வாக்கு: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Bajaga ,Jairam ,Delhi ,Bajaka ,Dinakaran ,
× RELATED ஜாம்நகர் ஏர்போர்ட் விவகாரம்;...