கடலூர்: கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலுர் அரசு மருத்துவமனையில் மட்டும் 26 பேர் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 280 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
The post கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதி! appeared first on Dinakaran.
