சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி காக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வசம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வியை கல்வியை போதிக்கும் கல்லூரிகளும், பேராசிரியர்களும் சிறப்பாக பணியாற்ற போதுமான கட்டமைப்பு வசதிகளும், அவற்றிற்கான நிதியும் போதுமானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.தமிகத்தில் சென்னை பல்கலைக் கழகம் பழைமையான, பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனாதிபதிகள், அறிவியல் அறிஞர்கள், பல்வேறுதுறையின் அறிஞர் பெருமக்கள், கல்வி வல்லுனர்கள், துணை வேந்தர்கள் என்று படித்தும், பணியாற்றியும் புகழ் பெற்றது.
இந்த சிறப்பு வாய்ந்த சென்னை பல்கலைக்கழகம் தற்பொழுது நிதி நெருக்கடியிலும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிரமப்படுகிறது என்று வரும் செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்பல்கலைக் கழகத்தில் 750 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 226 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலும் பல்கலைக்கழக ஊழியர்கள் 1,400 பணிபுரியும் இடத்தில் 600 பேர் மட்டுமே உள்ளனர்.பல்வேறு பல்கலைகழங்களும், கல்லூரிகளும் உருவாக அடித்தளமாக விளங்கிய சென்னை பல்கலைக்கழகம் தற்பொழுதுவரை இந்திய தரவரிசை பட்டியில் சிறந்த இடத்தைப் பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தனிச் சிறப்புடன் விளங்கும் சென்னை பல்கலைக்கழகம் மேலும் தொடர்ந்து சிறப்புடன் நடைபெறவும், சிறந்த கல்வியை போதிக்கவும், தேவையான பேராசிரியர்களையும், பணியாளர்களையும் நியமிக்கவும், போதிய நிதியை ஒதுக்கி, மாணவர்களின் வருங்காலத்தை வளமானதாக, வலிமையானதாக வடிவமைக்கும் சென்னை பல்கலைக்கழத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சென்னை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி காக்க வேண்டும் : ஜி.கே. வாசன் appeared first on Dinakaran.
