×

வேகத்தடை அமைக்க கோரிக்கை

 

சாயல்குடி, செப்.25: முதுகுளத்தூர் அருகே மட்டியரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தேவாலயம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ் ஏறிச் செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். இதுபோன்று தெருக்குழாய்களில் பெண்கள் குடிநீர் பிடித்து தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமச் சாலையில் அதிவேகமாக வரும் லாரி,கார் உள்ளிட்ட வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராமமக்கள் நலன் கருதி மட்டியரேந்தல் கிராம சாலையில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Mattiyarenthal ,Mudugulathur ,Dinakaran ,
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...