×

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் 11 நாள் நீட்டிப்பு

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கான நீதிமன்ற காவல் கடந்த 22ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் அன்று சிறையில் இருந்தபடி சந்திரபாபுவுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி 2 நாட்கள் காவல் நீடிக்கப்பட்டது.

அதுவும் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவிடம் பேசினார். இதில் இப்போது எல்லாம் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைக்கத் தேவையில்லை. நீங்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறீர்கள் என்று சந்திரபாபுவிடம் கூறிய நீதிபதி விசாரணை நடவடிக்கைகள் இன்னும் செய்யப்பட வேண்டும் என்று கூறி நீதிமன்ற காவலை மேலும் 11 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

The post ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் 11 நாள் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Telugu Desam Party ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...