×

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது விருப்பம், உறுதி, நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கும் வெற்றி: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

தாம்பரம்: தாம்பரம் மாநகர திமுக சார்பில், நேற்று மாலை தாம்பரம், சண்முகம் சாலையில் திமுக பவள விழா ஆண்டு, திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். அப்போது திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில், ‘ஒன்றிய பாஜ ஆட்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையில் ₹7 லட்சம் கோடி ஊழல் என சிஏஜி அறிக்கை சொல்கிறது. நான் அத்துறையில் அமைச்சராக இருந்து வெளியே வந்து 15 வருடத்துக்கு மேலாகிறது. இதுவரைக்கும் திமுகவினர் ஒரு குறை சொல்ல முடியுமா?

ஒன்றிய பாஜ அரசில் ₹7 லட்சம் கோடி ஊழல் என திமுகவோ, பிற அரசியல் கட்சிகளோ சொல்லவில்லை. ஒன்றிய அரசின் பொதுவான குழு கூறியுள்ளது. சோவியத் யூனியனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டை ஜோசப் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தியபோது, குருசேவ் உரையின்போது ஜோசப் ஸ்டாலின் நமது விருப்பம், நமது நம்பிக்கை, நமது உறுதி, நமது வெற்றி எனக் கூறியுள்ளார்.

அதேபோல், இந்தியாவில் மு.க.ஸ்டாலின்தான் நமது விருப்பம், நமது உறுதி, நமது நம்பிக்கை. அதுவே 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் அவருக்கு அளிக்கும் வெற்றி என்று டி.ஆர்.பாலு எம்பி பேசினார். இதில் மண்டலக் குழுத் தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், சிட்லபாக்கம் சுரேஷ், கொடி தாமோதரன், ரமணி ஆதிமூலம், ராஜேஸ்வரி சங்கர், ஹேமாவதி சேகர், திமுக பேச்சாளர்கள் வேல்மணி, கருணாகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது விருப்பம், உறுதி, நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்கு வழங்கும் வெற்றி: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : 2024 Parliamentary Election ,Stalin ,Palu MB. Tambaram ,Tambaram Municipal Dishagam ,Tambaram ,Sanmukam Road ,Djagal Coral Festival ,Dizhagam ,D. R.R. Balu MB ,Dinakaran ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...