×

அவிநாசி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்

 

அவிநாசி, செப்.24: அவிநாசி பேரூராட்சி பகுதியில் டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அவிநாசி பேருராட்சி தலைவர் தனலட்சுமிபொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அவிநாசி பேருராட்சி சுகாதார பிரிவும், டிபிசி பிரிவும் இணைந்து வீடு வீடாக மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மழைநீர் வடிகால்கள், வீதிகளில் உள்ள பள்ளங்கள், உபயோகப்படுத்தாத குடிநீர் தொட்டி, வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கல், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பிரிட்ஜ் பின்புறம் உள்ள தட்டு, பூந்தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரில் புழுக்கள் உருவாகி உள்ளதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது. புழுக்கள் இருந்தால் அதை முழுமையாக அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அவிநாசி பேரூராட்சி 18 வார்டு பகுதியில் கொசுஒழிப்பு நடவடிக்கையாக, புகை மருந்து அடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளரின் சுமையை எளிதாக்கும் விதமாகவும், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும் பொதுமக்களே முன்வந்து மேலே குறிப்பிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும். வைரஸ் காய்ச்சலை உருவாக்கும் புழுக்கள் தூய்மையான நீரிலேயே உருவாகும் தன்மை உள்ளது என்பதால் சேமித்து வைக்கும் குடிநீரினை நன்றாக மூடி வைப்பதுடன் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேலும் காய்ச்சல் பாதிப்பு பற்றிய விபரங்களை தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் உடனடியாக பேருராட்சி சுகாதாரப்பிரிவிற்கு தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post அவிநாசி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Avinasi municipality ,Avinasi ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட...