×

திருச்சியில் இருந்து கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து..!!

குஜராத்: திருச்சியில் இருந்து கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் எஞ்சின் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஹம்சாஃபர் விரைவு ரயிலில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ரயிலில் ஜெனரேட்டர் பெட்டியில் தீப்பிடித்து -பக்கத்து பெட்டிக்கும் பரவியது.

The post திருச்சியில் இருந்து கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Humsafar Express ,Trichy ,Ganganagar ,Gujarat ,Express ,Valsad ,Gujarat… ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்