×

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

 

ஈரோடு, செப்.23: ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.11 கோடி நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஈரோடு பெரியசேமூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 5.52 ஏக்கர் புஞ்சை நிலம், தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி உத்தரவின் பேரில், உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகளால் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செல்லாண்டியம்மன் கோயில் தக்கார் அருள்குமார், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் கவுசல்யா, துணை ஆட்சியர் (கோயில் நிலங்கள்) குப்புசாமி, துணை தாசில்தார் பழனிசாமி, ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அழகுராஐன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மீட்கப்பட்ட கோயில் நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.11 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Endowment Department ,Erode ,Periyasemur ,Hindu Religious Charities Department ,Dinakaran ,
× RELATED அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவோர் இனி...