×

களக்காடு அருகே பட்டபகலில் கைவரிசை 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

களக்காடு,செப்.23: களக்காடு அருகே உள்ள மேல மாவடி நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மனைவி மல்லிகா (68). அங்கன்வாடி ஊழியரான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டார், பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது. அதிலிருந்த 2 பவுன் எடையுள்ள தங்க செயின், அரை பவுன் எடையுள்ள தங்க கம்மல், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபோல அதே தெருவில் விவசாயி சூரியபெருமாள் வீட்டிலும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வீடுகளிலும் பட்டபகலில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post களக்காடு அருகே பட்டபகலில் கைவரிசை 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Natesan ,Mallika ,Mela Mavadi Nadutheru ,
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...