×
Saravana Stores

ஐதராபாத்- மியாபூரில் வினோதம் விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டை திருடிச்சென்ற மர்ம நபர்

திருமலை: விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடு முழுவதும் பல இடங்களில் செட் அமைத்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். அவ்வாறு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்- மியாபூரில் தற்காலிக செட் அமைத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலையின் கையில் 11 கிலோ லட்டு வைத்து வழிபாடு நடத்தி, இந்த லட்டு 7 நாட்களுக்கு பிறகு விசர்ஜனம் நேரத்தில் ஏலம் விடுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 11 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டு விநாயகர் கையில் வைக்கப்பட்டது.

நேற்று காலை விநாயகர் சிலை அருகே சென்ற பக்தர்கள் விநாயகர் சிலை கையில் இருந்த ராட்சத லட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தனர். அதில் இளைஞர் ஒருவர் விநாயகர் சிலை அருகே வந்து ஏலத்திற்கு விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த லட்டை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஐதராபாத்- மியாபூரில் வினோதம் விநாயகர் கையில் இருந்த 11 கிலோ லட்டை திருடிச்சென்ற மர்ம நபர் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Vinodham Vinayakar ,Miyapur ,Tirumala ,Ganesha Chaturthi ,Ganesha ,
× RELATED நடிகை சமந்தா விவகாரம் – அமைச்சருக்கு எச்சரிக்கை