×

டாடா நெக்சான் பேஸ்லிப்ட் கார்கள்

டாடா மோட்டார்ஸ், நெக்சான் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் கிரில்கள், பம்பர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள், ஸ்பிளிட் ஹெட்லாம்ப், புதிய அலாய் வீல்கள், ஒய் வடிவ டெயில் லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. உட்பகுதியில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூப், புதிய ஏசி பேனல், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 1.2 லிட்டர் டர்போ – பெட்ரோல் இன்ஜின் உள்ளது.

அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடுமேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள் உள்ளன. இதுபோல், 1.5 லிட்டர் டீசல் வேரியண்ட்டும் கிடைக்கிறது. டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்தக் காரில் 11 வேரியண்ட்கள் உள்ளன. அறிமுகச் சலுகையுடன் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.8.09 லட்சம் (நெக்சான் பேஸ்லிப்ட் ஸ்மார்ட் பெட்ரோல் எம்டி) எனவும், டாப் வேரியண்டான நெக்சான் பேஸ்லிப்ட் கிரியேட்டிவ் வீசல் ஏஎம்டி சுமார் ரூ.13 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், நெக்சான் இவி பேஸ்லிப்ட் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்ஆர் மற்றும் எல்ஆர் என 2 வேரியண்ட்கள் உள்ளன. இவற்றில் கிரியேட்டிவ் பிளஸ், ஃபியர்லெஸ், பியர்லெஸ் பிளஸ், ஃபியர்லெஸ் பிளஸ் எஸ், எம்பவர்டு, எம்பவர்டு பிளஸ் என்ற 6 டிரிம்கள் உள்ளன. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.14.74 லட்சம் (எம்ஆர் வேரிண்ட்) எனவும், டாப் வேரியண்ட் (எல்ஆர்) சுமார் ரூ.19.94 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்ஆர் வேரியண்டில் 30 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 325 கி.மீ தூரம் வரை செல்லும். எல்ஆர் வேரியண்டில் 40.5 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. 465 கி.மீ தூரம் வரை செல்லலாம்.

இந்த இரண்டிலுமே முந்தையை மாடலை விட இந்த பேஸ்லிப்ட் மாடல் 12 கி.மீ கூடுதலாக மைலேஜ் வழங்கும். இரண்டுக்குமே 7.5 கிலோ வாட் ஏசி சார்ஜர் வழங்கப்படும். இதன்மூலம் எம்ஆர் வேரியண்டில் 4.3 மணி நேரத்திலும், எல்ஆர் வேரியண்டில் 6 மணி நேரத்திலும் சார்ஜ் செய்யலாம். மோட்டார் திறனை பொருத்தவரை எம்ஆர் வேரியண்ட் அதிகபட்சமாக 129 எச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எல்ஆர் 145 எச்பி பவரையும் 215 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post டாடா நெக்சான் பேஸ்லிப்ட் கார்கள் appeared first on Dinakaran.

Tags : Tata ,Tata Motors ,Nexon ,Tata Nexon ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தையில் இன்று...