×

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அப்பட்டமான தேர்தல் விளையாட்டு: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அப்பட்டமான தேர்தல் விளையாட்டு என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2010ல் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பிலிருந்த மசோதாவை தற்போது நிறைவேற்றுவோம் ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமல்படுத்துவோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்து மே10 1921 அன்று நீதிக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. 1927-ல் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு தனது முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியை தேர்ந்தெடுத்தது.1929-ல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசியலில் சம உரிமை வழங்கும் தீர்மானத்தை பெரியார் நிறைவேற்றினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலையை தான் மோடி அரசு செய்திருக்கிறது. Socialist, Secular எனும் வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு முன்னுரையில் இருந்து எடுத்தவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவது கடினமா? அதற்கான வாய்ப்பு இல்லையா? இப்போதே தேர்தல் வைத்தால், உடனே தேர்தல் நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் 2029ம் ஆண்டுக்குள் அமல்படுத்துவோம் என்கிறார்கள், இது அப்பட்டமான தேர்தல் விளையாட்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அப்பட்டமான தேர்தல் விளையாட்டு: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj ,Chennai ,Minister ,Mano Thangaraj ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...