×

அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம்: கோவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு

கோவை: மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன் என ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக கோவை மண்டல நிர்வாகிகளுடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார். கோவையில், உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியில் (டைமண்ட் ஹால்) நடைபெற்ற நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன்; போர்ப்படையில் முன் நிற்பவர் பயப்படக் கூடாது; நான் நிற்பேன்; என் மூக்கை உடை, மருந்து போட்டுக் கொண்டு திரும்ப வந்து நிற்பேன்; கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட பூத்துக்கு 20 பேர் வீதம் மொத்தம் 40,000 பேர் தேவை. 40 ஆயிரம் பேரால் 19 லட்சத்து 38 ஆயிரம் பேரை சென்று சேர முடியாதா?. மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்.

‘விக்ரம்’ படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?. இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம் இவ்வாறு கூறினார்.

The post அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம்: கோவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Manima ,Kamal Haasan ,Coimbatore ,M.N.M ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...