×

உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது கட்டாயம்: ராணுவ தளபதி பேச்சு

புதுடெல்லி: “பாதுகாப்பு சவால்களை எதிர் கொள்ள உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது கட்டாயம்,’’ என்று ராணுவ தளபதி எம்எம். நரவானே தெரிவித்தார். டெல்லியில் நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்று ராணுவ தளபதி எம்எம். நரவானே பேசியதாவது: ‘போர் போன்ற இக்கட்டான சூழலில், உள்நாட்டு தொழில்நுட்பம் மட்டுமே எதிரிகளை வீழ்த்த நமக்கு கை கொடுக்கும். இதனால், வெளிநாடுகளின் தொழில்நுட்பங்களை நாம் சார்ந்திருக்க தேவையில்லை. எனவே, பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது கட்டாயமாகும். இதற்கான முயற்சி ராணுவத் தரப்பில் இருந்து எடுப்படுவதே மிகவும் பொருத்தமானது. நமது ராணுவத்துக்கு தேவையான மிக முக்கியமான பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய ராணுவம் மிக வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அதன் செயல்பாட்டு தேவைகளுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை தேடுவது அதிகரித்துள்ளது’. இவ்வாறு அவர் பேசினார்….

The post உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது கட்டாயம்: ராணுவ தளபதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Army Commander ,Mm. ,Naravan ,Commander ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...