×

பிளஸ் 1 மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்ட வழிகாட்டி புத்தகம் ஈரோடு வருகை

 

ஈரோடு, செப். 22: பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்ட வழிகாட்டி புத்தகம் ஈரோடு வந்தடைந்தது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வியறிவையும், பல்வேறு திறன்களை மேம்படுத்த நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 14,027 வழிகாட்டி புத்தகம் ஈரோடு வந்தடைந்தது. இதனை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் சரிபார்த்து, புத்தகங்கள் பாதுகாப்பு அறையில் இருப்பு வைத்தனர். இந்த புத்தகத்தில், நம்மை நாம் புரிந்து கொள்ளுதல், உயர்கல்வி படிப்புகளை புரிந்து கொள்ளுதல், மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள், உயர்கல்வியில் சேர்வதற்கான முன் தயாரிப்புகள், வேலை குறித்த கண்ணோட்டம், வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகவும், இந்த புத்தகங்கள் ஓரிரு நாளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிளஸ் 1 மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்ட வழிகாட்டி புத்தகம் ஈரோடு வருகை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode.… ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...