×

விராலிமலை, இலுப்பூர், அன்னவாசலில் 68 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

விராலிமலை, செப்.21: விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக 98 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே 18 சிலைகள் கரைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று 68 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டதன் மூலம் மீதமுள்ள 12 சிலைகள் இன்று மற்றும் நாளைக்குள் கரைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் விராலிமலை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக விராலிமலை 35, இலுப்பூர் 30, அன்னவாசல் 33 சிலைகள் என மொத்தம் அப்பகுதிகளில் 98 விநாயகர் சிலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதை தொடர்ந்து இதுவரை விராலிமலை, இலுப்பூர், அன்னவாசலில் ஏற்கனவே 18 சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று 68 சிலைகள் கொட்டு அடித்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று போலீஸார் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைத்தனர். மீதமுள்ள 12 சிலைகள் இன்று, நாளை(.22ம் தேதி)க்குள் அந்தந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

The post விராலிமலை, இலுப்பூர், அன்னவாசலில் 68 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Viralimalai, Ilupur ,Annavasal ,Viralimalai ,Ilupur ,Ganesha Chaturthi ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை