×

கிறிஸ்தவ ஆலய சபை ஆண்டு விழா

திசையன்விளை,செப்.21: திசையன்விளை செல்வமருதூர் இரட்சண்ய சேனை ஆலய சபை 61வது ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காலையில் கொடியேற்றம், ஆராதனை, அசனம் நடந்தது. சபை போதகர் சுதாகர் வரவேற்றார்.மாலையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தனது சொந்த செலவில் 250 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, துணைத்தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர் பிரதீஷ்குமார், பிரதீப் ஸ்வீட்ஸ் முருகன், ஆசிரியர் செல்லப்பா கலந்து கொண்டனர்.விழாவில் கோவில் கட்டிக்கொடுத்த எஸ்.டி.கே. குடும்பத்தை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தனராஜ் சாமுவேல், ஜெசுரன் தாமஸ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

The post கிறிஸ்தவ ஆலய சபை ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Christian Church Church ,Vector ,Selvamarathur Salvandshana Sena House ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு...