‘‘எதிர்கால கூட்டணியில எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல தாமரையை சுமக்க வேண்டாம் என்று யார் சொல்றாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பொதுமக்களிடம் பப்ளிசிட்டி ஆக வேண்டும் என்பதற்காகவே தாமரையின் யாத்திரையை தொடங்கினார் தாமரை கட்சியின் ‘மவுன்டன்’ தலைவர். அவரது யாத்திரையின்போது வரும் கூட்டத்தை பார்த்து மலைத்து போய் என்ன பேசுகிறோம் என்று ெதரியாமல் கூட்டணி வைக்கபோகும் கட்சியை பற்றி கடும் விமர்சனம் வைத்துவிட்டாராம். ‘மவுன்டன்’ தலைவரின் சர்ச்சை பேச்சுக்கு இலை கட்சியின் இரண்டாம் கட்ட தலைகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவிச்சு இருக்காங்க. தொண்டர்கள் கொந்தளிப்பில் இருக்காங்க… காக்கி அதிகாரியா இருந்தவரு இல்ல, அதான் மொதல்ல ஆளுங்கட்சியை தொட்டாரு… இப்போது கூட்டணியில் உள்ள எதிர்கட்சியை தொட்டிருக்காரு… ஒரு அரசியல்வாதி செய்யக்கூடாத விஷயத்தை அசால்டாக ெசய்வது அவங்க கட்சி தொண்டர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால், இலை கட்சி, அதன் தலைமையை பற்றி பேச தாமரையின் ‘மவுன்டன்’ தலைவருக்கு அருகதையே இல்லை. இதனால, இலை கட்சியில் இருந்து ஒவ்வொருத்தரும் தன்னால் இயன்றவரை ‘மவுன்டன்’ தலைவருக்கு செம டோஸ் விடுறாங்க. விழுப்புரத்துக்காரர் ஆரம்பித்து வைத்த இந்த விவகாரம், சென்னையில மாஜி மைக் மந்திரி மூலமாக பூதாகரமாக வெளிச்சத்துக்கு வந்துடுச்சாம். இவரை தொடர்ந்து தென்மாவட்டத்து மாஜிக்கள் எல்லாம் தங்கள் பங்குக்கு வெளுத்து கட்டிக்கிட்டு இருக்காங்க. இதற்கிடையே சொந்த ஊரில் முகாமிட்டிருக்கும் பொதுச்செயலாளரான சேலத்துக்காரரை நேரிலும், போனிலும் முன்னாள் மாஜிக்கள் தொடர்பு கொண்டுகிட்டே இருக்காங்களாம். எக்ஸ்ட்ரா லக்கேஜை கழற்றிவிடுவதுதான் நமக்கு நல்லது என்பதே அனைவரின் மைன்ட் செட்டாக உள்ளதாம். இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்ட சேலத்துக்காரரு, அடுத்த மூவ்மென்ட் எப்படி இருக்கணும் என்று ஆழ்ந்த யோசனையில் இருக்காராம். என்னதான் மைக் மந்திரி சொன்னாலும் கூட்டணி இல்லை என்பதை நீங்களும் சொல்லிடுங்க தலைவரே. அப்பதான் நம்ம கெத்து ஊருக்கு தெரியும் என்று கொம்பு சீவிக்கிட்டு இருக்காங்களாம் சில மூத்த நிர்வாகிகள்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ெசாந்த ரிசார்ட் பணிக்காக அரசின் தளவாடங்களை அள்ளிச் சென்ற அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் தூங்கா நகர் பெயரில் முடியும் ஊரில் இருக்கிற தொழிற்பேட்டையின் அதிகாரியாக நான்கெழுத்துக்காரர் இருக்கிறார். கடந்த இலைக்கட்சி ஆட்சியில் தொழில் மந்திரியாக இருந்தவரின் பரிந்துரையில்தான் இவர் அதிகாரியாக இவ்வூருக்கு வந்தார். இவரது வருகை நேரத்தில் தார்ச்சாலை, சுவர் வேலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கென பல கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் நடந்தது, இவருக்கு நல்ல வருவாயைத் தந்ததாம். இப்போதைக்கு இந்த அதிகாரி கடற்கரையோர மாவட்டத்தின் கடலோரத்தில் ஒரு ரிசார்ட் கட்டி வருகிறாராம். இந்த கட்டுமானத்திற்கென அலுவலகத்து டேங்கர் லாரி துவங்கி, பொக்லைன் இயந்திரம் வரையிலும் அத்தனை அரசு வாகனங்களையும் ஓசியில் பயன்படுத்தி வருவதாக இவர் மீதான குற்றச்சாட்டு உள்ளதாம். அவரின் உடன் இருக்கும் அதிகாரிகளே இது குறித்து மேலிடத்துக்கு தகவலை தட்டி அனுப்பி உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் புலம்பல் ரொம்பவே வித்தியாசமாக இருக்காமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலையோட கூட்டணி முறிஞ்சுபோனா நாடாளுமன்ற தேர்தல்ல நாம ஜெயிக்க முடியாது.. தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் புரியாமல் தாமரை தலைமை அக்கப்போர்களின் பேச்சை கேட்டு நம் டென்ஷனை ஏத்துறாங்க… வெயில் அதிகமாக உள்ள வட மாவட்டத்துல உள்ள தொகுதி நிர்வாகிங்க புலம்பறாங்க. தமிழ்நாட்டுல என்னதான், தாமரைக்காரங்க கத்தினாலும் கட்சி உடனே வளராதுன்னு தெரிஞ்சுதான், இலையோட ஒட்டிக்கொண்டு, கரைசேரலாம்னு ஒரு கணக்கு போட்டா.. தாமரையோட தலைவர் ‘மவுன்டன்’ போகிற இடத்தில் எல்லாம் இலையோட மாஜி மினிஸ்டர் ஊழல்களை விமர்சித்து வர்றாராம். அதோட, இலையோட தலைவியையும் விட்டு வைக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு விமர்சனத்தை வெச்சதால, இலைகட்சிக்காரங்க கடும் கோபத்துல இருக்காங்க. இந்நிலையிலத்தான் மாஜி அமைச்சர், இலை கூட்டணியில தாமரை கிடையாதுன்னு சொல்லிட்டாரு.
இதனால, இலையோட சேர்ந்து எப்படியாவது இந்த முறை ஜெயிச்சுடலாம்னு வெயிலூர்ல அறிவிக்கப்படாத 3 எழுத்து ேவட்பாளரு நினைச்சிருந்தாரு. ஆனா, இந்த கூட்டணி முறிவு அறிவிப்பால அப்செட்ல இருக்காராம். வெயிலூர்ல மட்டுமில்லாம, பெரும்பாலான மாவட்டங்கள்ல, இலைய வெச்சி கணக்கு போட்டவங்க, ‘மவுன்டன்’ பேச்சால அப்செட் ஆகியிருக்காங்களாம். எல்லாம் டெல்லி போட்ட ஸ்கெட்ச் சரியா ஒர்க் அவுட் ஆகி இருக்கு என்று தாமரையின் மாநில நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசி கொண்டார்களாம்…ஸ்டேட் பிரசிடென்ட் பேச்சால, இப்ப ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
The post எக்ஸ்ட்ரா லக்கேஜ் தாமரையை கழற்றிவிட சொல்லும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.