×

களக்காட்டில் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை 24ம் தேதி விஜர்சனம்

களக்காடு, செப்.20: களக்காட்டில் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வருகிற 24ம் தேதி சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது. களக்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் களக்காடு தோப்புத்தெரு, சாலைப்புதூர், கீழப்பத்தை, வியாசராஜபுரம், மாவடி, மலையடிபுதூர், பொத்தையடி உள்ளிட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதுபோல அகில பாரத இந்து மகாசபா சார்பில் சிதம்பரபுரம், மூங்கிலடி, ராமகிருஷ்ணாபுரம், கல்லடி சிதம்பரபுரம், கடம்போடு வாழ்வு உள்ளிட்ட 15 இடங்களிலும், விசுவ ஹிந்து பரிசத் சார்பில் இடையன்குளம், கீழ உப்பூரணி, கீழக்கருவேலங்குளம், நெடுவிளை, பத்மநேரி, மஞ்சுவிளை, கோவில்பத்து, கீழதேவநல்லூர் உள்ளிட்ட 24 இடங்களிலும் மொத்தம் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழிபாட்டிற்கு பின் வருகிற 24ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, உவரி கடல் மற்றும் பாபநாசம் தாமிரபரணி ஆற்றிலும் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post களக்காட்டில் 53 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை 24ம் தேதி விஜர்சனம் appeared first on Dinakaran.

Tags : Vijarsanam ,Vinayagar ,Kalakkad ,Ganesha ,
× RELATED பழநி பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோர் தரிசனம்