×

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு: மனைவியுடன் கருத்து வேறுபாடு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்சின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். ேதனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கருத்து வேறுபாடு’ என்ற காரணத்தை மையப்படுத்தி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்பநல நீதிமன்றத்தில் எண்ணிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இருவரும் மனமுவந்து மனு தாக்கல் செய்யப்படவில்லை. ரவீந்திரநாத் குமார் மட்டுமே விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு அவரது மனைவி தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்.

The post சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு: மனைவியுடன் கருத்து வேறுபாடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI FAMILY COURT OPS ,Rabindranath Kumar ,Chennai ,Chief Minister ,OPS ,Member of Parliament ,Chennai Family Welfare Court ,Ravindranath Kumar ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...