×

அமித்ஷாவாக மணிவண்ணன்,மோடியாக நான்! கதை ரெடி: படத்தலைப்பு ‘சனாதனம்’… மேடையில் கலகலப்பூட்டிய சத்யராஜ்

சென்னை: சென்னையில் நடைபெற்ற இயக்குனர் மணிவண்ணனும் நானும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் தனது நண்பர் மணிவண்ணனுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுற்றாண்டுநூலகத்தில் எழுத்தாளர் கே.ஜீவபாரதியின் இயக்குனர் மணிவண்ணனும் நானும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் தனது நண்பர் மணிவண்ணன் உடனான அனுபவங்களை கலகலப்பாக பகிர்ந்து கொண்டார். அமித்ஷாவாக மணிவண்ணன் நடிக்க மோடியாக தான் நடிப்பதற்கு திரைக்கதை தயார் என்று கூறிய நடிகர் சத்யராஜ் படத்தின் தலைப்பு சனாதனம் என்று கூறி கலகலப்பூட்டினார்.

The post அமித்ஷாவாக மணிவண்ணன்,மோடியாக நான்! கதை ரெடி: படத்தலைப்பு ‘சனாதனம்’… மேடையில் கலகலப்பூட்டிய சத்யராஜ் appeared first on Dinakaran.

Tags : Manivannan ,Amit Shah ,Modi ,Sathyaraj ,Chennai ,Nanam ,
× RELATED அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு;...