×

ரூ.3845 கோடி கடன் மோசடி: மும்பை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மும்பை: ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 15 வங்கிகளிடம் ரூ.3845 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக மும்பையை சேர்ந்த யூஐஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட 15 பேர் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. மும்பையை சேர்ந்த யூனிட்டி இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனமானது ஸ்டேட் வங்கி மற்றும் 14 வங்கிகளிடம் ரூ.3845கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது. இது குறித்து ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் சிபிஐயிடம் புகார் செய்தது. புகாரை தொடர்ந்து யூனிட்டி இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிஷோர் அவர்சேகர்உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

The post ரூ.3845 கோடி கடன் மோசடி: மும்பை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Mumbai ,UIL ,State Bank ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...