×

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் விநாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 24-ம் கூட்டம் அதன் தலைவர் எஸ். கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அவசர கூட்டமாக இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. காவிரியில் விநாடிக்கி 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கபட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

இதனை தொடர்ந்து உடனடியாக காரிவியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படியில், இன்று இந்த கூட்டம் நடைபெற்றது. காவிரியில் விநாடிக்கு 12,500 கன அடிவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது. நடப்பாண்டில் செப்.14 வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 103.5 டி.எம்.சி காவிரி நீரில் 38.4 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

கர்நாடகத்தை பொறுத்த வரையில் விநாடிக்கி 3,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஆனால் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின் படி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள 4 அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது, எவ்வளவு தண்ணீர் திறக்க முடியும் என வினித் குப்தா அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை ஆய்வு செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கூட்டத்தின் முடிவில் விநாடிக்கு 5,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என உத்தரவிட்டார்

The post காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Caviri Management Commission ,Karnataka ,Tamil Nadu ,Kaviri ,Delhi ,Cavieri ,
× RELATED கர்நாடக எல்லையில் கனமழை பாலாற்றில்...