×
Saravana Stores

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன்: யுனெஸ்கோ அறிவிப்பு

புதுடெல்லி: சாந்தி நிகேதன் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் பிம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்தி நிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை வங்க கவிஞர் ரவீந்திரநாத் நிறுவினார். கலாச்சார பெருமை மிக்க இந்த தலத்தை யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்தியா பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. சாந்தி நிகேதனை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோ தன் டிவிட்டர் பக்கத்தில், “உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன். இந்தியாவுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளது.

The post யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன்: யுனெஸ்கோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sandi Niketan ,UNESCO ,New Delhi ,Shanthi Niketan ,Santi Niketan ,Bimpur district ,West Bengal ,Sant Niketan ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...