×

வெல்லம் வரத்து அதிகரிப்பால் மூட்டைக்கு ரூ.30 வரை சரிவு

ஈரோடு: ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள்(30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டு சர்க்கரை 3,100 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,800 மூட்டையும், அச்சு வெல்லம் 500 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,230 முதல் ரூ.1,300 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,250 முதல் ரூ.1,310 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,150 முதல் ரூ.1,320 வரை என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வெல்லம் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவை மூட்டைக்கு ரூ.30 வரை விலை குறைந்து விற்பனையானதாக வெல்ல மார்க்கெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post வெல்லம் வரத்து அதிகரிப்பால் மூட்டைக்கு ரூ.30 வரை சரிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Chithod Vela Market ,Erode.… ,Dinakaran ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்