×

கர்நாடகாவில் கூடுதலாக 3 துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேச்சு

துமகூரு: கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக இருந்துவரும் நிலையில், மேலும் 3 துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சர் கே.என்.ராஜண்ணாவின் பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி, மக்களவை தேர்தலிலும் கர்நாடகாவில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டுவருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா துமகூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகிவருகிறது. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். மக்களவை தேர்தலுக்கு தயாராவதால், நிர்வாக வசதிக்காக மேலும் 3 துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி பிரிவை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும். மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும், வீரசைவ சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். எனவே அக்டோபர் முதல் வாரத்தில் மேலிட தலைவர்களை சந்தித்து, மேலும் 3 துணை முதல்வர்களை நியமிப்பது குறித்து பேசுவேன்’ என்றார். இது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் டி.கே.சிவகுமாரின் சகோதரரும், எம்.பியுமான டி.கே.சுரேஷ், இது குறித்து நீங்கள் ராஜண்ணாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் தானே அரசை நடத்துகிறார்/ இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகாவில் கூடுதலாக 3 துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும்: அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,KN Rajanna ,Dumakuru ,TK Sivakumar ,Deputy Chief Minister ,Chief Ministers ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...