×

விவசாயிகளுக்கு இயற்கை முறை வேளாண் பயிற்சி

நாமகிரிப்பேட்டை, செப்.17: நாமகிரிப்பேட்டை அடுத்த கார்கூடல்பட்டி கிராமத்தில், அட்மா திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி மற்றும் இயற்கை முறை விவசாயம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து, வேளாண்மை துறை திட்டங்கள், மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். நாமக்கல் மாவட்ட ஈசா இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளர் ராஜா மண்புழு உரம், தயாரிப்பு பற்றியும், பஞ்சகாவியம் தயாரிப்பு மற்றும் மீன் அமிலம் உற்பத்தி குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அட்மா திட்டா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன் உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகளுக்கு இயற்கை முறை வேளாண் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Namakirippet ,Karkudalpatti ,Atma ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி