×

வில்லுக்குறியில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி 2 பேர் படுகாயம்

திங்கள்சந்தை, செப்.17 : பாறசாலை பகவதியான்விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50).கட்டிட தொழிலாளி. இவரது நண்பர் பிலாமூட்டுக்கடை எரிச்சலூரை சேர்ந்த பெனட் (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை நாகர்கோவிலுக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சுரேஷ்குமார் ஓட்டினார். பெனட் பின்னால் அமர்ந்திருந்தார். ஸ்கூட்டர் வில்லுக்குறி பாலம் தாண்டி அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரே வந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பெனட் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லுக்குறியில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Villukuri ,Suresh Kumar ,Parasalai Bhagavatiyanvilai ,Bilamootukkadai Griddur ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு