×

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 2 நாளில் சவரன் ரூ.400 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக 2 நாளில் சவரன் ரூ.400 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 12ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.44,160க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரன் ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.43,840க்கு விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 14ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.43,840க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,500க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,530க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 2 நாளில் சவரன் ரூ.400 உயர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Savaran ,Chennai ,Shave ,Sawaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு..!!