×

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தினசரி 20 முதல் 30 பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது;

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் எதிரொலியாக எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூரில் உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவருக்கு டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்பு இல்லை. டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புக்கான மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பில் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

The post தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Ma ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...