×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து அதற்கான ஏடிஎம் கார்டுகளையும் வழங்கினார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக X தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்; கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி – மாநகராட்சிப் பணியாளர்கள், @TNeGA_Official பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!

களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister BC ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Mukheri. ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...