×

மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

மதுரை, செப். 16: மதுரை பொய்கரைபட்டியில் அமைச்சர் பி.மூர்த்தியும், எல்லீஸ் நகரில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, மாநில இலக்கிய அணி நேரு பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் வடிவேல் முருகன், பகுதி செயலாளர்கள் மருது பாண்டியன், பாண்டியராஜன், சசிகுமார், கவுரி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆசைத்தம்பி (கள்ளந்திரி), தீபா தங்கம் (அ.வலையபட்டி),

ஒன்றிய செயலாளர்கள் சிறைச்செல்வன், பொதும்பு தனசேகர், பாலராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பால்பாண்டியன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி அழகுபாண்டி, அணி அமைப்பாளர்கள் வீரராகவன், ஆதிசங்கர், வக்கீல்கள் கலாநிதி, கார்த்தி, உமாசிங்கதேவன், அழகுபாண்டியன், முத்தையன், நிர்வாகிகள் பிரகாஷ், முருகன்,
துணை மேயர் நாகராஜன், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலெட்சுமி, விஜயா குரு, ஜென்னியம்மாள், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மதுரையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Minister ,B. Murthy ,Poikaraipatti ,Pdr. Palanivel Thiagarajan ,Ellies Nagar ,Rights ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...