- சாதனம்
- மின்னணுவியல் திணைக்களம்
- கலைஞர் அரசு கலைக் கல்லூரி டாக்டர்
- Ayyarmalai
- குலிதலை
- உபகரணங்கள் பராமரிப்பு
- தின மலர்
குளித்தலை, செப். 16: குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரி மின்னணுவியல் துறை சார்பில், வீட்டு உபயோக மின் சாதனங்கள் பராமரிப்பு தொடர்பாக இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு வரவேற்றார். திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி மின்னணுவியல் துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன், மாணவர்களுக்கு எல்இடி டிவி சரிபார்த்தல் தொடர்பாக செய்முறை விளக்க பயிற்சி அளித்தார்.
இதில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, திருவெறும்பூர் அரசு கல்லூரி மின்னணுவியல் துறை மாணவ, மாணவிகள், குளித்தலை கலைஞர் அரசு கல்லூரி மின்னணுவியல் மற்றும் இயற்பியல் துறை மாணவ, மாணவிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக சுப்பிரமணி செயல்பட்டார். பயிற்சி ஏற்பாடுகளை மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் பிச்சைமுத்து, கணேசன், வீரமுரளி, சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர். மின்னணுவியல் துறை இணை பேராசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.
The post வீட்டு உபயோக மின் சாதன பராமரிப்பு பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.