×

நேர்காணலில் புதிய நடைமுறை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிக்கை: நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ,பி,சி,டி முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர். இப்புதிய நடைமுறைகளுடன் ஏற்கனவே உள்ள Random shuffling முறையும் சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்புத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நேர்காணலில் புதிய நடைமுறை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Tamil Nadu Government Personnel Examination Commission ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...