×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது. 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, வருகிற ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியானது appeared first on Dinakaran.

Tags : DNBSC Group ,Chennai ,DNBSC Group 4 ,Election Commission ,Tamil Nadu Civil Servants Election Commission ,Hall Ticket Selection Board ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...