×

மேற்கு வங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்

கொல்கத்தா: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மேற்கு வங்க அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டத்தில் உள்ள மகளிர் கூட்டுறவு சங்கம் கடந்த 2020 ஆண்டு முதல் செயல்படவில்லை. இது குறித்து மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த கூட்டுறவு வங்கியில் செலுத்திய பணம் ரூ.50 கோடி அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படாததால் டெபாசிட்தாரர்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனு கடந்த மாதம் 24ம் தேதியன்று நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அவர் மாநில குற்றப்பிரிவு போலீசாரிடமிருந்து இந்த வழக்கை விடுவித்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உத்தரவிட்டார். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கு வங்க அரசு செயல்படுத்தாத நிலையில் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். அபராதத்தை இரு வாரங்களுக்குள் கோர்ட்டில் செலுத்தவும், 3 நாட்களுக்குள் வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேணடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

The post மேற்கு வங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : High Court ,West Bengal Govt. ,Kolkata ,Kolkata High Court ,West Bengal government ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்