×

சாத்தான்குளம் அருகே மீட்கப்பட்ட கட்டாரிமங்கலம் கோயில் நிலங்கள் 5 ஆண்டுக்கு ரூ.3.76 லட்சத்துக்கு ஏலம்

சாத்தான்குளம், செப். 15: சாத்தான்குளம் அருகே இந்துசமய அறநிலையத்துறை மூலம் மீட்கப்பட்ட கட்டாரிமங்கலம் கோயில் நிலங்கள் ரூ.3.76 லட்சம் குத்தகைக்கு ஏலம் போனது. சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 67 ஏக்கர் புஞ்சை நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்த நிலங்கள் முழுவதுமாக கடந்தாண்டு ஆதிஆழ்வார் கோயில் செயல் அலுவலர் அஜித் தலைமையில் மீட்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் கட்டாரிமங்கலம் கோயிலில் நடந்தது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், இந்துசமய அறநிலைய சாத்தான்குளம் ஆய்வர் பகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஏலத்தில் சுமார் 40 ஏக்கர் நிலம், 5 வருட குத்தகைக்கு 3.76 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நிகழ்ச்சியில் ஏகாந்தலிங்க சுவாமி கோயில் பேஸ்கார் முத்துராஜா, கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாத்தான்குளம் அருகே மீட்கப்பட்ட கட்டாரிமங்கலம் கோயில் நிலங்கள் 5 ஆண்டுக்கு ரூ.3.76 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Katarimangalam ,Satankulam ,Hindu Samaya Charities Department ,Dinakaran ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா