×

மணப்பாறை அருகே கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

மணப்பாறை, செப்.15: மணப்பாறை அருகே கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத வாலிபர் சடலத்தை போலீசார் மீட்டனர். மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டி அருகே உள்ள தனியார் கிணற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார் , வையம்பட்டி தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து சென்று கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இறந்தவருக்கு 30 வயது இருக்கும். முகத்தில் ரத்த காயம் இருந்தது. அவர் எதற்காக இந்த பகுதிக்கு வந்தார், இளைஞரின் உயிரிழப்பிற்கு என்ன காரணம் என்பது குறித்து மணப்பாறை போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணப்பாறை அருகே கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Poomalaipatti ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு